தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்; தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள். தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை இன்று (23.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்கள். 

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு மருத்துவமனைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், சேவைகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வருங்காலத்தில் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தி மக்கள் பயனடையும் வகையில் தென்காசி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு இந்த மருத்துவக்கல்லூரி பெரும் உதவியாக அமையும். மருத்துவக்கல்லூரி அமையும் இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டியில் 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு புதிய கட்டிடமும், இக்பால் நகரில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையமும், கீழப்பாவூர் வட்டம் நாட்டார்பட்டியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையமும், வாசுதேவநல்லூர் வட்டம், இராமநாதபுரத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையமும், சுப்பிரமணியபுரத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையமும், ஆலங்குளம் வட்டம் ஓடைமறிச்சானில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணைசுகாதார நிலையமும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரூ. 18.52 கோடி செலவில் 23 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும், ரூ.1.25 கோடி செலவில் 5 நகர்ப்புற நல வாழ்வு மையங்களையும், ரூ. 1.5 கோடி செலவில் 5 துணை சுகாதார நிலைய கட்டிடங்களையும், ரூ.5.90 கோடி செலவில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகு, செவிலியர் குடியிருப்பு, புறநோயாளிகள் பிரிவு கட்டிடங்களையும், ரூ.6.85 கோடி செலவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவிகளையும் ரூ. 2.79 கோடி செலவில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் கருவி, ஒளி புகா அறை, எக்ஸ்ரே கருவிகளையும், ரூ.22.50 இலட்சம் மதிப்பீட்டில் கடையநல்லூர் சித்தா மருத்துவமனையில் சித்தா பிரிவு திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும், தென்காசி மாவட்டம் முழுவதும் ரூ 58.04 கோடி செலவில் 34 புதிய மருத்துவ கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டிடம், சித்தா மற்றும் யோகா பயிற்சி கட்டிடம், ரூ. 114 கோடி ஒருங்கிணைந்த செய்தார் திறன் மேம்பாட்டு கட்டிடம், ரூ.54 இலட்சம் மதிப்பீட்டில் கட்டண படுக்கைகள் கழிவறை மற்றும் தரைகள் அமைக்கும் பணியும், ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் சலவையக கட்டிடம் ரூ. 15 இலட்சம் செலவில் உணர்வுத்திறன் பூங்கா விளையாட்டுப் பொருட்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.09 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிட பணிகளும், ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிட பணிகளும், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் ரூ.63 இலட்சம் மதிப்பீட்டில் உடல் கூறாய்வு மைய கட்டிட பணிகளும், சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ.63 இலட்சம் மதிப்பீட்டில் உடற்கூறாய்வு மைய கட்டிடப்பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலக்கடையநல்லூரில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மகப்பேறு பிரிவு கட்டிட பணிகளும், இலத்தூரில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார கட்டிட பணிகளும், செங்கோட்டையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளும், தலைவன் கோட்டையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளும், புளியங்குடியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளும், சாயமலையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்பசுகாதார கட்டிட பணிகளும், கடையநல்லூர் தொகுதி சேர்ந்தமரத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வக பணிகளும், கடையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வக பணிகளும், சுந்தரேசபுரத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டிலும், குடியிருப்பு பகுதியில் 35 இலட்சம் மதிப்பீட்டிலும், பண்பொழியில் 30 இலட்சம் மதிப்பீட்டிலும், அண்ணாநகரில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், சத்தியவாணி முத்துநகரில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், வடகரை கீழ்பிடாகையில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், வாவாநகரத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், அச்சன்புதூர் கிழற்கில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், அச்சன்புதூர் மேற்கில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆய்க்குடியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், துணை சுகாதார நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது.

வாசுதேவநல்லூர் தொகுதி துரைச்சாமியாபுரத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டிலும், விஸ்வநாதபேரியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆலங்குளம் தொகுதி நத்தத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், சங்கரன்கோவில் தொகுதி திருவேட்டநல்லூரில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டிலும், செந்தட்டியாபுரத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டிலும் துணை சுகாதார நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு LCG -யினையும், 02 பயனாளிகளுக்கு யானைக்கால் நோய் வீக்கப் பராமரிப்பிற்கான மருந்துப் பெட்டகத்தினையும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகத்தினையும், 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், கலைஞரின் கண்ணொளி காப்போம் 2024-2025 திட்டத்தின் கீழ் 07 மாணவ, மாணவிகளுக்கு கண்கண்ணாடிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், இணை இயக்குநர் (சுகாதாரக் கல்வி நிலையம்) (பொது சுகாதாரம் (ம) நோய்த்தடுப்பு மருந்துத்துறை, சென்னை) மரு.V.சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், சொக்கம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மரு.கி.தவமணி, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பா.சுப்பம்மாள், துணைத்தலைவர் ஜவேந்திரன் தினேஷ், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்முத்தையா பாண்டியன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.சந்திர மோகன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம்.திவ்யா மணிகண்டன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!