தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 31.10.2024 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பும் பட்டசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும், பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிக்க வேண்டும். பெரியவர்கள் உடனிருக்கும் போது பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். குடிசைகள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள் பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் சரணாலயங்கள் அமைந்துள்ள அமைதி பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும், அரசு அறிவித்துள்ள காலை 6.00 மணி முதல் காலை 7.00 வரை மற்றும் மாலையில் 7.00 மணி முதல் 8.00 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.