மேலகரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் 11ஆம் வகுப்பு படிக்கும் 73 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். தென்காசி மாவட்டம், மேலகரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். பேரூர் கழக செயலாளர் சுடலை வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கினார். மேலும், பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மூன்று மாணவ மாணவிகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஊக்கத் தொகையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியினை உடற்கல்வி ஆசிரியர் துரை ஒருங்கிணைத்தார். இதில் 11ஆம் வகுப்பு படிக்கும் 48 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் மொத்தம் 73 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கவிதா, தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அழகு சுந்தரம், குற்றாலம் பேரூர் செயலாளர் சங்கர் (எ) குட்டி, கவுன்சிலர்கள் கபிலன், சிங்கத்துரை, யாகவா சுந்தர், பூபதி பாண்டியன், கல்யாண சுந்தரம், பட்ட முத்து, சந்திரன், ஈஸ்வரன், பகவதி ராஜ், குமாரவேல், முத்துவேல், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பெருமாள், முருகன், ஆறுமுகம், பண்டாரம், குத்தாலிங்கம், மாடசாமி பாண்டியன், சுரேஷ், ஜெய்சங்கர், அமானுல்லா, பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை ரெஜிலா பானு நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.