தென்காசியில் இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என என்றும் போற்றப்படும் பன்முகத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15 ஆம் நாளை ஆண்டு தோறும் “இளைஞர் எழுச்சி நாள்” ஆக கடைபிடிக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாவட்ட அளவில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அன்னாரது நினைவினைப் போற்றும் வகையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் எல்.ரெஜினி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.