தென்காசி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தாமதமின்றி ரேஷன் கார்டுகள் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேசன் கடை எண், ரேசன்கடை ஊழியர் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் மண்டல / தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள உங்கள் ஸ்மார்ட் கார்டு (333XXXXXX034) பெற்று கொள்ளவும் என விண்ணப்பதாரரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது. இந்த குறுஞ்செய்தி வந்தவுடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் புதிய ஸ்மார்ட் கார்டு கேட்டால் உங்களுக்கு நீங்கள் ரேசன் பொருள் வாங்கும் கடைக்கே ரேசன் கார்டு வந்து விடும் என்று கூறி திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.
இதனை நம்பி பலரும் ரேசன் கடைக்கு சென்று ஸ்மார்ட் கார்டு எப்போது வரும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால் ரேசன் கடை ஊழியரோ கார்டு யாருக்குமே வரவில்லை என்று பதிலளிக்கும் நிலையில் புதிய ரேசன் கார்டுகள் வாங்குவது பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு அவரவர்கள் பொருட்கள் வாங்கும் கடைகளிலேயே எளிதில் ரேசன் கார்டு கிடைக்கும் படி வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.