தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின் கீழ் அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் என்ற திட்டத்தின்படி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்” ஏழாம் கட்டமாக எதிர் வரும் 16.10.2024 புதன்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் 17.10..2024 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களும் 16.10.2024 புதன் கிழமை அன்று முற்பகல் 9.00 மணிமுதல் ஆலங்குளம் வட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கியமான திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிற்பகல் 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஆலங்குளம் வட்டத்தில் உள்ள S.S.N திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தும், கோரிக்கைகள் ஏதும் இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரைகள் வழங்கப்படும்.
மேலும், அன்றைய தினம் தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களும் நகர்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து இரவு தங்க உள்ளனர். பின்னர் மறுநாள் காலை (17.10.2024) காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை ஆலங்குளம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
எனவே ஆலங்குளம் வட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு ஆய்வுக்கு வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களிடம் தங்களது பகுதிக்கு தேவைப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றையும், தங்களது பகுதிகளிலுள்ள குறைகளையும் நேரில் தெரிவித்து அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிகளுக்கும் முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.