தென்காசி மாவட்டம் சங்கனாப்பேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி ஏதும் நடந்துள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதன் கிழமை இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. சங்கனாப்பேரி பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இருப்பினும் இன்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை ஓட்டி சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக இஞ்சின் ஓட்டுனர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் திருநெல்வேலி ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செங்கோட்டை-சென்னை பொதிகை ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.