தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், தட்டம்மை (மீசல்ஸ்) ரூபலா கண்காணிப்பு பணி, பருவ கால நோய்கள் தடுப்பு, புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் அயோடின் பயன்பாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தர கட்டுப்பாடு மற்றும் மாவட்ட சுகாதார பேரவை நடவடிக்கைகள் பற்றியும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் விவாதிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வி. கோவிந்தன். இணை இயக்குனர் (நலப்பணிகள்) மரு. பிரேமலதா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு. ராமநாதன், துணை இயக்குனர் (தொழுநோய்) மரு. அலர் சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொறுப்பு மருத்துவ அலுவலர்கள், சமுதாய நல ஆர்வலர்கள், அனைத்து அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!