சாம்பவர் வடகரை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் வெறிநாய்கள்; பொதுமக்கள் அச்சம்..

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் அதிகமான அளவில் சாலைகளில் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலைகளில் அதிகமான அளவில் சுற்றி திரிவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை தொடர்கிறது. 

எனவே சாலையில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது. இப்பகுதியில் கடந்த 13.09.2024 அன்று 8 வயது பள்ளி சிறுமி உட்பட 13 பேரை வெறி நாய் கடித்து காயத்துடன் ஆய்க்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!