நில அதிர்வுகளை ஏற்படுத்தும் குவாரிகளை நெறிப்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

நில அதிர்வுகளை ஏற்படுத்தும் கல்குவாரிகளை நெறிப்படுத்த வலியுறுத்தி பொட்டல்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளதாக சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டி, பொட்டல் புதூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், நெல்லை மாவட்டத்தில், ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், கடந்த 22.9.24 அன்று காலை 12 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயந்து சில மணி நேரங்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

இது பற்றி மாவட்ட நிர்வாகம் 3 ரிக்டேர் அளவுக்கும், கீழாக நில அதிர்வு உணரப்பட்டிருக்கலாம். இதனால் பெரும் பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆயினும் திடீரென இப்பகுதிகளில் நில அதிர்வு உருவாகுவதற்கு காரணம், அப்பகுதிகளில் உள்ள குவாரிகள் தான் என்று, சமூக ஆர்வலர்களும் அரசியல் பிரமுகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு விதிகளையும் தாண்டி, அளவுக்கு அதிகமாக பாறைகள் உடைக்கப்படுகிறது. கற்களும் மணலும் தோண்டி எடுக்கப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான ராட்சத வாகனங்களில் இந்த கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது, இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஏற்கனவே சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் நேற்று நடந்த சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில், வருகிற 27.09.2024 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை பொட்டல் புதூர் மேல பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து, நில அதிர்வுகளை ஏற்படுத்தும் “குவாரிகளை நெறிப்படுத்து” என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கடையம் மாரிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்பழகன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், இந்தியன் ஹியூமன் விஜிலென்ஸ் அசோசியேசன் மாவட்ட துணை சேர்மன் முகமது யாகூப், ரவண சமுத்திரம் மஸ்ஜிதுல் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யது நாகூர் ஹாஜி, வீராசமுத்திரம் பள்ளிவாசல் தலைவர் காஜா முஹைதீன், பொட்டல்புதூர் பள்ளிவாசல் செயலாளர் கனி, சமூக ஆர்வலர் சங்கிலி பூதத்தான் தென்பொதிகை வியாபாரிகள் சங்க பொருளாளர் பாக்யராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் நல்லாசிரியர் செய்யது மசூது, ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் இக்பால், ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ஜப்பார் யூசுஃபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!