தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நன்றி..

தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் பயன்பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமானது நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதும், நிலைத்த தன்மை அடையச் செய்வதும் ஆகும்.

தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கமானது 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நகர்ப்புற உறைவிடம் அற்றோருக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய உறைவிடத்தை ஏற்படுத்தித் தருதல், நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களின் வியாபாரத்தினை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் பொருத்தமான இடம் ஒதுக்கீடு செய்தல், நிதி அமைப்புகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் திறன் வளர்ப்பு மூலம் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவுதல் போன்றவற்றை இந்த இயக்கம் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.

TNSRLM இன் நோக்கம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் நிதி மற்றும் பிற சேவைகளை அணுகுவதன் மூலம் ஏழைகளின் குடும்ப வருமானத்தை அதிகரிப்பதே ஆகும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழாவினை 09.09.2024 அன்று மதுரை மாவட்டத்தில் துவக்கி வைத்தார். 

தென்காசி மாவட்டத்தினை சார்ந்த 504 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.63 கோடி தொகை வங்கி கடனாகவும், 20 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடனாக ரூ. 11.36 கோடி, 8 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.8.இலட்சமும், 95 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ரூ. 14 இலட்சமும், 10 சுய உதவிக் குழுக்களுக்கு வட்டார வணிக வளமையம் மூலம் ரூ.50 இலட்சமும், இணை மானிய திட்டத்தின் மூலம் 26 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 75 இலட்சமும், சிறு தொழில் முதலீட்டு நிதி 10 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5 இலட்சம் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 647 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 9424 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.52.51 (கோடி) மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் தெரிவித்ததாவது, என் பெயர் கலா. நான் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வசித்து வருகிறேன். எனது கணவரின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி சிரமப்பட்டு வந்தோம். தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின் படி கடையநல்லூர் நகராட்சியின் சமுதாய அமைப்பாளர் மூலமாக ஸ்ரீ சக்தி மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக 2016-2017 ஆம் ஆண்டில் சேர்ந்தேன். ஸ்ரீ சக்தி மகளிர் சுய உதவி குழுவின் மூலம் சேமிப்பு மற்றும் சுழல் நிதியிலிருந்து உள் கடன் பெற்று சிறிய அளவில் குறைந்த முதலீட்டில் தையல் தொழில் செய்து வந்தேன். மேலும் கூடுதலாக தொழிலை மேம்படுத்த இக்குழுவின் மூலம் ICICI வங்கியின் மூலம் வங்கிக்கடன் பெற்று அந்த தொகையை வைத்து எனது தொழிலை விரிவுபடுத்தினேன். முதல் கட்ட கடன் தொகை முழுவதுமாக செலுத்திய பிறகு இரண்டாம் கட்டமாக UPI வங்கியின் மூலம் கடன் பெற்று மேலும் தொழிலை விரிவுபடுத்தினேன். தையல் தொழிலை விரிவு படுத்தியதன் மூலம் எனக்கு மாத வருமானம் 10 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கிறது. தற்போது 09.09.2024 அன்று மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் சுய உதவி குழுக்களுக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் எனக்கு ரூ.1,50,000 வங்கி கடன் கிடைத்தது. இத்தொழிலின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. மேலும் எங்களுடைய வாழ்வாதாரத்தையும் மற்றும் தொழிலையும் மேம்படுத்த உதவியாக இருந்த மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு என்னுடைய நன்றியை மனதார தெரிவித்துக் கொள்கிறேன். 

முத்து செல்வி, கடையநல்லூர்: என்பெயர் முத்து செல்வி. எனது சொந்த ஊர் கடையநல்லூர். நான் எனது கணவரின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி சிரமப்பட்டு வந்தேன். தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வழிகாட்டுதலின் படி கடையநல்லூர் நகராட்சியின் சமுதாய அமைப்பாளர் மூலமாக ஸ்ரீ சக்தி மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக 2016-2017 ஆம் ஆண்டில் சேர்ந்தேன். ஸ்ரீ சக்தி மகளிர் சுய உதவி குழுவின் மூலம் சேமிப்பு மற்றும் சுழல் நிதியிலிருந்து உள் கடன் பெற்று சிறிய அளவில் குறைந்த முதலீட்டில் பெட்டிக்கடை தொழில் செய்து வந்தேன். மேலும் நாங்கள் கூடுதலாக தொழிலை மேம்படுத்த இக்குழுவின் மூலம் முதல் முறையாக ICICI வங்கியின் மூலம் கடன் பெற்று அந்த தொகையை வைத்து எங்களது தொழிலை விரிவுபடுத்தினோம். முதல் கட்ட கடன் தொகை முழுவதுமாக செலுத்திய பிறகு இரண்டாம் கட்ட கடனை UPI மூலம் வங்கியில் பெற்று மேலும் தொழிலை விரிவு படுத்தினோம். பெட்டிக்கடை தொழிலை விரிவு படுத்தியதன் மூலம் எங்களுக்கு மாத வருமானம் 10 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கிறது. தற்போது 09.09.2024 அன்று மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் தலைமையில் சுய உதவி குழுக்களுக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் எனக்கு ரூ.1,50,000 வங்கி கடன் கிடைத்தது. இத்தொழிலின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது மேலும் எங்களுடைய வாழ்வாதாரத்தையும் மற்றும் தொழிலையும் மேம்படுத்த உதவியாக இருந்த மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு எங்களுடைய நன்றியை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்: இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!