உயிர்பலிகள் ஏற்படும் முன் விவசாயிகளையும் விளை நிலங்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட நிர்வாகத்தை எஸ்டிபிஐ ஆய்வுக்குழு வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளை ஒட்டியுள்ள வடகரை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, புளியரை போன்ற பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் விவசாயிகளையும், வேளாண் நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு மாதமாக வடகரை பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களை தொடர்ந்து நாசப்படுத்தி வருவதோடு தற்போது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இந்நிலையில் நேற்று இரவு வடகரை தீ.ப. தெரு பகுதியில் மைதீன் என்பவரின் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தை சாய்த்ததோடு, பொன்னாகுடி பகுதியில் சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான தோப்பில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முழுவதுமாக காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. மேலும் மூணுசுழி பகுதியில் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான தோப்பில் முன்னூறுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை வேரோடு பிடிங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் விளை நிலங்களுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையிலான ஆய்வுக்குழு காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தனர். மேலும் உயிர்பலிகள் ஏற்படும் முன் உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட செயலாளர் முத்து முஹம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது நைனார், வேளாண் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது காசிம், சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் ஷேக் முஹம்மது, கடையநல்லூர் தொகுதி தலைவர் ஷேக் முஹம்மது ஒலி, தொகுதி இணைச்செயலாளர் சாஜித் அலி, நகர தலைவர் முஹம்மது இஸ்மாயில், நகர துணைத்தலைவர் அப்துல் பாசித், நகர செயலாளர் முஹம்மது யாசின், நகர பொருளாளர் அப்துல் ரகுமான், நகர இணைச்செயலாளர் புஹாரி, வாவாநகரம் தலைவர் அன்சாரி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.