வடகரையில் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென காட்டு யானைகள் வந்து சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. மேலும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் அவ்வப்போது யானைகள் வந்து செல்வதால் இப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வடகரை சாம்பவர் தெரு மற்றும் உ.மு. சந்து பின்புறம் குடியிருப்பு பகுதியில் யானைகள் வந்து சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து யானைகள் விவசாய பயிர்களை அழித்து வருவதோடு குடியிருப்பு பகுதிகளிலும் அவ்வப்போது வந்து செல்கிறது. மேலும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களை அழித்து நாசம் செய்து வருகிறது.



இந்நிலையில் நேற்று நள்ளிரவில் யானைகள் வந்து சென்றதை அறிந்த வடகரை எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் யானைகள் வந்து சென்றதை பார்வையிட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் கூடுதல் கவனம் எடுத்து யானைகளை வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.