தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் 20.09.2024 அன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை தலைமையேற்று கல்லூரி முதல்வர் (பொ) ரா.ஜெயா தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டார்கள்.
முதல் அமர்வில் துபாய் ஆகாஷ் பிளான்டேஷன் முதன்மை விஞ்ஞானி முனைவர் ரவிந்தர் சிங் உயிரியல் துறையில் வேலை வாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினார். 2வது அமர்வில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியை மற்றும் அரசு கண் மருத்துவர் ரீட்டா எஃப்சி ராணி கண் நோய்கள் மற்றும் கண் பராமரிப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை போட்டி வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.
இக்கருத்தரங்கில் தூத்துக்குடி செய்ன்ட் மேரிஸ் கல்லூரி மாணவிகள் ஒட்டுமொத்த பரிசினை பெற்றார்கள். துறைத்தலைவர் முனைவர். சு.கு.சுந்தர், இணைப்பேராசிரியர் முனைவர். மாரிப்பாண்டி, கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் ஜெயகுமார், முனைவர் அமலாராணி, முனைவர். சேர்மன் ராஜதுரை, முனைவர் அகிலா மஹாலட்சுமி, முனைவர் பழனிக் கனி, வைத்தீஸ்வரி, அழகு மீனாட்சி சுந்தரி மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். விழாவின் இறுதியில் முதுநிலை முதலாமாண்டு மாணவர் அருண்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.