தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் விவசாய பயிர்களை அழித்து வரும் வனவிலங்குகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. வடகரை நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் 20-09-2024 அன்று கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகர தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சமூக ஊடக அணி செயலாளர் வாவை சேக் முகம்மது, தொகுதி தலைவர் சேக்முகம்மது ஒலி மற்றும் தொகுதி இணைச் செயலாளர் சாஜித் ஒலி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர துணை தலைவர் அப்துல் பாஸித் வரவேற்றார்.
செயற்குழு கூட்டத்தில், வடகரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், தொடர்ந்து விவசாய நிலங்களிலும், மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் அடுத்த கட்டமாக இதுபோன்ற வனவிலங்களால் ஏற்படும் இழப்புகளை தடுக்க கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நகர பொருளாளர் அப்துல் ரகுமான், நகர செயற்குழு உறுப்பினர் காஜா செரீப், நகர இணைச் செயலாளர் முகம்மது யூனுஸ், ரகுமானியாபுரம் கிளை தலைவர் இஸ்மாயில், செயலாளர் திவான், பொருளாளர் அபுபக்கர், துணைச் செயலாளர் சேக் உசேன், மேற்கு கிளை செயலாளர் இஸ்மாயில், வாவாநகரம் கிளை துணைத் தலைவர் சாலிக், செயலாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக நகர செயலாளர் முகம்மது யாசின் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.