தாம்பரம் ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் என நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.



அதில், தட்கல் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்களையும், மக்கள் தாமதமின்றி பெற டிக்கெட் கவுண்டரில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் ரவணசமுத்திரம், ரயில் நிலையத்தில் நெட்வொர்க் பிரச்சனைகள் காரணமாக டிக்கெட் கிடைக்க பல நேரங்களில் தாமதம் ஆகிறது. எனவே! தாமதமின்றி டிக்கெட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரவணசமுத்திரம் ரயில் நிலையம் முதல் பஸ் நிறுத்தம் வரை உள்ள தார் சாலை, மிகவும் மோசமாக கொண்டும் குழியுமாக உள்ளது. எனவே புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும். தாம்பரம் செல்லும் ரயில் கடையத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும். மேலும் ஈரோடு செல்லும் ரயில், ரவணசமுத்திரத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவி முகைதீன் பீவி ஹசன் முதலியார்பட்டிக்கு உயர் மின் கோபுர விளக்கு, அமைக்க கோரிக்கை மனு அளித்தார். முதலியார்பட்டி பள்ளிவாசல் பொருளாளர் ஹசன், முகைதீன், பள்ளிவாசல் மையவாடிக்கு, நன்மை கூடமும், ஆழ்துளை கிணறும் அமைக்க கோரிக்கை மனு அளித்தார். விவரமாக கேட்டறிந்த நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் எம்பி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.