தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் நவாஸ் கான் வரவேற்றார். துணைத் தலைவர் பழக்கடை சுலைமான் வாழ்த்தி பேசினார். சுதந்திரம் என்பது பல தலைவர்கள் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து பெற்றதை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஜாதி, மதங்களைக் கடந்து, லஞ்சம் ஊழல் இல்லாத, உயர்வு, தாழ்வு இல்லாத, ஆட்சி அமைத்து, அனைத்து மக்களுக்காகவும் பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும், என்று சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் சுதந்திர தின உரையாற்றினார். மூத்த உறுப்பினர் பிச்சையா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சங்க உதவியாளர் காதர் மைதீன், ஹெர்லின் ஜெபராஜ், ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் மீரான், தங்கையா, காமராஜ், ராஜா, காலித், முகைதீன் பிச்சை, முகமது அப்துல் காதர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.