தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலக்கு இதழும், ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து “தேசத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்றது. இதில், ஜெ.பி.பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகி ப. ஹேம்லெட் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ. மைக்கேல் மரியதாஸ், பொறியியல் கல்லூரியின் முதல்வர். முனைவர். எம்.ராஜ்குமார், மீரான் மருத்துவமனை தலைமை மருத்துவர் அப்துல் அஜீஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வில் தென்காசி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ்த் துறைத் தலைவர் அ. இராஜன் ஜான் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர். அ.நதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தேசத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிகள் குறித்த ஆலோசனைகள் மாணவர்களால் பகிரப்பட்டன. சிறந்த ஆலோசனைக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வேலை வாய்ப்பை மையமாகக் கொண்ட நடன நிகழ்வு மாணவர்களால் மேடையில் சிறப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. இலக்கு இதழின் ஆசிரியரும், சமூக ஆர்வலருமான கா.நியாஸ் அகமத் ஒருங்கிணைப்பு செய்திருந்த இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.