தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் ரூ.15 கோடியே 84 இலட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ரூ.15 கோடியே 84 இலட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை 27.02.2024 அன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் கடைக்கோடியில் உள்ள தென்காசி மாவட்டத்திற்கென பல்வேறு திட்டப் பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.11 கோடியே 33 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினையும், சங்கரன்கோவிலில் 39.02 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பினையும், கடையநல்லூர் வட்டம் புன்னைவனத்தில் ரூ 15.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து, சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டபடவுள்ள 14 புதிய கூடுதல் வகுப்பறைகளை கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.




இந்நிகழ்ச்சியில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச். மனோஜ் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சு.தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் காவேரி சீனித்துரை, மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆர்.பாஸ்கர், ஆலங்குளம் கல்லூரி முதல்வர் இ.ஷீலா, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. கவிதா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, தொழில் நுட்ப கல்விக் கோட்டம் செயற் பொறியாளர் பாண்டியராஜ், செயற் பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்புத்துறை) அனிதா சாந்தி, உதவி செயற் பொறியாளர் ஜான் ஆஷிர், உதவி பொறியாளர் சுரேந்தர் பாக்கியராஜ், ஆலங்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர் சுதா மோகன்லால், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன், சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவன், கடையநல்லூர் வட்டாட்சியர் சுடலைமணி, கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பிரதீபன், உதவி செயற்பொறியாளர் நல்லசிங், உதவிப் பொறியாளர் சரத்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









