தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருக்கும் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் நள்ளிரவில் பல இடங்களில் சேகரித்து வந்த கழிவுநீரை தென்காசி உழவர் சந்தை எதிரே உள்ள குளத்தில் விட்டு விடுவதால் பெரும் சுகாதாரக் கேடும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தால் அப்பகுதியை கடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. நேற்று இரவு மேற்கண்ட இரு வாகனமும் சுமார் 11:30 மணியளவில் பல இடங்களில் அகற்றி வந்த கழிவு நீரை குளத்தில் திறந்து விட்டதால் இரவில் சாலையில் செல்ல முடியாமல் பல பேர் துர்நாற்றத்தால் அவதிப்பட்டனர். இவ்வாறு பொது இடங்களில் கழிவு நீரை கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்தும் கழிவு நீர் வாகனங்கள் மீது நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.