தென்காசியில் முடநீக்கியல் மருத்துவர் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தென்காசியில் இந்திய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கம் மற்றும் நெல்லை மாவட்ட முடநீக்கியல் மருத்துவர் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம், சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்கம், நெல்லை முடநீக்கியல் மருத்துவர் சங்கம், மற்றும் ரோட்டரி கிளப் குற்றாலம் சாரல் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவருமான தென்காசி டாக்டர் டி.ஆர்.எஸ். முத்துராமன் தலைமை தாங்கினார். தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.எம்.மணி முன்னிலை வகித்தார். குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் எஸ் கே எஸ் திலிப் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கத்தின் தேர்வு செய்யப்பட்ட தலைவர் பேராசிரியர் டாக்டர் மணிகண்டன், மாநில செயலாளர் டாக்டர் வி.நாராயணன் இணைச் செயலாளர் டாக்டர் மாரிமுத்து, நெல்லை மூடநீக்கியல் மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஐவன் சாமுவேல் தேவகுமார், செயலாளர் டாக்டர் தாமோதரன், யோகா டவர்ஸ் சேகர், ஆகியோர் இந்திய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு மாநில மற்றும் மாவட்ட சங்கத்தின் சார்பில் செய்து வரும் பல்வேறு சாதனைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்கள். தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் காவல் ஆய்வாளர் எஸ்.எம்.மணி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் பால் கண்ணன் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவருமான டாக்டர் டி ஆர் எஸ் முத்துராமன், செயலாளர் எஸ்.கே.எஸ் திலீப், பொருளாளர் பி. ராமகிருஷ்ணன், துணை ஆளுநர் யோகா டவர்ஸ சேகர், நெல்லை மாவட்ட முட நீக்கியல் மருத்துவர்கள், ரோட்டரி கிளப் குற்றாலம் சாரல் உறுப்பினர்கள், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள், ஆய்க்குடி ஜே.பி கல்லூரி மாணவர்கள், தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தென்காசி யானை பாலம் சிக்னல் பகுதியில் இருசக்கர, மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் பற்றியும், சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு செய்தனர். முடிவில் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் எஸ்.கே.எஸ்.திலீப் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!