தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த வங்கிகடன் மானியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தல் தொடர்பாக வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாமில் 25.07.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.



பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வதாரத்தை மேம்படுத்த வங்கிக் கடன் மானியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தல் தொடர்பாக வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு கடன் பெறும் வசதி தொடர்பான முகாம் நடைபெற்றது. இம்முகாமில், தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகையான 62 மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் (வங்கிக் கடன் மானியம் & வீட்டு கடன்) பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களில் 62 மாற்றுத்திறனாளிகள் உதவிகள் பெற ஏதுவாக துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாமில், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 95,000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என மொத்தம் ரூ.7,60,000 மதிப்பிலான நலத்திட் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், முன்னோடி வங்கி அலுவலர் இசக்கிமுத்து, உதவிமக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.