தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு (Spot Admission) 31.07.2024 வரை இணையதளம் (www.skilltraining.tn.gov.in) வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான Fitter (பொருத்துநர்), Electrician (மின்சாரப்பணியாளர்), Mechanic Motor Vehicle (கம்மியர் மோட்டார் வாகனம்) மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான Mechanic Diesel (கம்மியர்டீசல்), Pump Operator cum mechanic (பம்ப்மெக்கானிக்) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன. மேலும் தொழிற்நுட்ப மையம் 4.0 திட்டத்தின் கீழ், ஈராண்டு தொழிற்பிரிவுகளான Advanced CNC Machining Technician-NCVT (மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழிற்நுட்ப வல்லுநர்) Mechanic Electric Vehicle NCVT (கம்மியர் மின்சார வாகனம்) மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான Industrial Robotics and Digital Manufacturing Technician NCVT (தொழிற்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர்), Manufacturing Process Control and Automation (தொழிற்துறை இயக்க கட்டுப்பாடு மற்றும் தானியக்கம்) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ்போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் அணுகவும். பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், தையல் கூலி, மூடுகாலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபடகருவிகள், பஸ்பாஸ், சலுகை கட்டண ரெயில்பாஸ், ஆகியன வழங்கப்படும். மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதி உண்டு.
மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசி, கடையநல்லூர், மற்றும் வீரகேரளம்புதூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம் மற்றும் தென்காசி-04633-290393, கடையநல்லூர்-04633- 290270, வீரகேரளம்புதூர் 04633-277962 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.