நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினரால் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கலைஞரை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட துணைக் கண்காணிப்பாளரிடம் தென்காசி நகர திமுக செயலாளர் ஆர்.சாதிர் மனு அளித்தார்.

அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் தலைமைப் பொறுப்பாளரான சீமான் முன்னாள் முதல்வர் கலைஞரைப் பற்றி மிகவும் கீழ் தரமான முறையில் தரக்குறைவாக விமர்சித்ததோடு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பேசியுள்ளார். முதல்வர் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டும், தமிழர்களின் வாழ்வியலுக்கு முழுமுச்சாக பாடுபட்டதற்கும் மாற்றாகவும், கலைஞரின் புகழுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் அவரின் மீது அந்தந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி நகர திமுக செயலாளர் ஆர். சாதிர் தெரிவித்துள்ளார்.
மனு அளிக்கும் இந்நிகழ்வில், தென்காசி நகர திமுக நிர்வாகிகள் அவைத்லைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ், பொருளார் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதி மைதீன் பிச்சை, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுமான் சாதத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்ரஹீம், மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.