தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 19.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண். 168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் Genearth Services, Tvs Training Services உட்பட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Candidate Login – ல் பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Employer Login ல் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ, 04633-213179 (அல்லது) 9597495097 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.