தென்காசியில் அண்ணாமலையை கண்டித்து காங்கிரசார் சாலை மறியல் போராட்டம்..

காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப் பெருந்தகையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் அவதூறு பேச்சை கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எஸ். பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்த இப்போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸார் கோஷமிட்டனர். மேலும், அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த காங்கிரஸ் கட்சியினரை தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இப்போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் பூமாதேவி, எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ராமச்சந்திரன், தென்காசிமாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், கீழப்பாவூர் யூனியன் துணை சேர்மன் முத்துக்குமார், நகர காங்கிரஸ் தலைவர்கள் ராமர், முப்புடாதி பாண்டியன், குற்றாலம் துரை, சிறுபான்மை பிரிவு சலீம், சம்சுதீன் வட்டாரத் தலைவர்கள் பெருமாள், குமார் பாண்டியன், கதிரவன், முகம்மது உசேன், மகளிர் அணி சீதாலட்சுமி, இளைஞர் காங்கிரஸ் சந்தோஷ், பண்பொழி மீரான், முகம்மது ரபி, பொருளாளர் ஈஸ்வரன், ஆய்க்குடி பெரியசாமி, சுரேஷ், கந்தையா ராஜீவ் காந்தி காவல் முஸ்தபா, தியாகராஜன், நரி சேட், செல்வன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!