தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்புக்குழு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜன்னத், உறுப்பினர் சுலைஹாள் பீமா, கல்விக்குழு உறுப்பினர்கள் ராஜா, துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை முத்துச்செல்வி நாச்சியார் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.



நிகழ்ச்சியில் போதை பொருட்களின் தீமைகள் பற்றியும், அதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை பற்றியும், கடையம் காவல்துறை துணை ஆய்வாளர் வேல்முருகன், போதை பொருள் தடுப்பு துணை ஆய்வாளர் மாரி ராஜா, தென்பொதிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வெங்கடேஷ், ஜான் மில்லர், ஆசிரியைகள் ஆஷாராஜ், கண்மணி, ஹெப்சி, சங்கீதா மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணாக்கர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.