நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது..

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் குற்றாலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், வீராணம் பகுதியில் கட்டப்படும் தனது வீட்டினை பார்த்துவிட்டு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 11) திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றாலம் வந்திருந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!