குற்றாலத்தில் படகு சவாரி; மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

குற்றாலம் வெண்ணமடை குளத்தில் படகு சவாரி துவக்க விழா..

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் படகு சவாரி துவக்கவிழா இன்று (06.07.2024) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 1993 ஆம் ஆண்டு முதல் படகுகுழாம் அமைத்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகுசவாரி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சாரல் சீசன் நிலையை கணக்கில் கொண்டும், குளத்தில் நீர்வரத்தை கணக்கில் கொண்டும் இங்கு படகு சவாரி நடத்தப்படும். 2022- ல் ஜூலை 10-ல் படகு சவாரி துவக்கப்பட்டது.

இந்த ஆண்டு சற்று முன்பாகவே ஜூலை 7-ல் துவக்கப்படுகின்றது. தென்காசி தனிமாவட்டமாக பிரிந்த பிறகு இது மூன்றாவது படகுசவாரி. இங்கு படகு சவாரி செய்ய இரு நபர் மிதிபடகு, நான்கு நபர் மிதிபடகு, நன்கு நபர் துடுப்பு படகு மற்றும் தனிநபர் படகும் உள்ளது. இருநபர் மிதிபடகுக்கு ரூ.150, நான்கு நபர் மிதிபடகுக்கு ரூ.200, நான்கு நபர் துடுப்பு படகுக்கு ரூ.250, தனி நபர் படகுக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த படகு சவாரியில் மகிழ்ச்சியாக பங்கு பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குற்றாலம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், மேலாளர் B.சக்திவேல், மண்டல கணக்கு அலுவலர் T.ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், சுற்றுலா அதிகாரி சீதாராமன், உதவி சுற்றுலா அதிகாரி சந்திரகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!