தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடனா நதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடனா நதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், இன்று (05.07.2024) தண்ணீர் திறந்து வைத்தார்.



கடனாநதி பாசனத் திட்டத்தின் கீழுள்ள அரசபத்துகால், வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால், காங்கேயன்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 3987.57 ஏக்கர் நேரடிப் பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு கார் பருவ சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 05.07.2024 முதல் 31.10.2024 வரையிலான 119 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடி வீதம் 664.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி I & II மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார் கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி மற்றும் இரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்கள் பயன் பெறும். எதிர் வரும் நாட்களில் தென்மேற்கு பருவ மழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர் பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லையென்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயனபடுத்தவும், நீர்விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறும் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர் (நீர்வளஆதாரத்துறை) சுப்பிரமணிய பாண்டியன், உதவி பொறியாளர்கள், உமாபதி, கணபதி, பேச்சரசன், அந்தோணிராஜ், முகதாரணி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கடனாநதி நீர்பாசனத்தை சார்ந்த விவசாய பிரதிநிதிகள், அரசு அலுவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.