சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்..

சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்குட்பட்ட சூரங்குடியில் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தையும், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் கால் மற்றும் வாய்நோய், கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டத்தையும் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான சிவஆனந்த் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாடுகளின் உரிமையாளரின் ஆதார் கார்டு மற்றும் புகைப்படம் இதற்காக செயல்படும் பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனில் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் காதுகளில் அடையாள அட்டை டேக் செய்யப்படும். இவ்வாறாக இத்திட்டத்தில் ஒரு முறை பதிவு (One Time Registration) மூலம் பதியப்படும் பயனாளிகள் வருடத்திற்கு ரூ.250 மட்டும் பிரீமியம் தொகை செலுத்துவதன் மூலம், மாடுகளுக்கு உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால் ரூ.35,000 வரை இன்சூரன்ஸ் தொகை திரும்பக் கிடைக்கும் வசதி இருப்பதால், மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்காமல் புதிய மாடு வாங்கிக்கொள்ள வழி ஏற்படும்.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக சூரங்குடியில் 210 மாடுகளுக்கு இன்சூரன்ஸ் அடையாள அட்டை டேக் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக ஊராட்சிக்கு உட்பட்ட மாயம்பாறை கிராமத்தில் 108 மாடுகளுக்கு டேக் செய்யப்பட்டது. மேலும் ஊராட்சிக்குட்பட்ட வல்லராமபுரம் மற்றும் புதுக்கிராமம் ஆகிய ஊர்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின்படி திருநெல்வேலியில் இருந்து வந்த கால்நடை ஆய்வாளர் கண்ணன் நடுவக்குறிச்சி கால்நடை மருத்துவர் நாகராஜன், கால்நடை உதவியாளர் செல்வமணி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு இந்த முகாமினை நடத்தியது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துப்பாண்டி, வார்டு உறுப்பினர்கள் கண்ணன் (எ) பேச்சிமுத்து, பூமாரி கோபால், ஊராட்சி செயலாளர் மாரித்துரை, பணித்தள பொறுப்பாளர்கள் முத்துலட்சுமி, பட்டுராஜா ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!