ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு..
இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் கல்வி கற்பித்தலில் 17 ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்றுள்ளது எனவும், இக்கல்லூரியில் பயின்ற பலர் அரசு அதிகாரிகளாக மாறி வருவதாகவும் கூறி நெல்லை பேராயர் பர்னபாஸ் கல்லூரி நிர்வாகத்தை பாராட்டினார். கல்லூரியில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. பாளை ஜான்ஸ் கல்லூரி தாளாளர் ஜெயசந்திரன், நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் தாளாளர் ஜேசு ஜெகன், திருமண்டல ஆடிட்டர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாந்தபுரம் சேகர தலைவர் ஸ்டேன்லி இம்மானுவேல் ஆரம்ப ஜெபம் (இறைவணக்கம்) செய்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா வரவேற்றார். முதல்வர் பொ. தங்கம் ஆண்டறிக்கை வாசித்தார்.




திருநெல்வேலி திருமண்டல பேராயர் டாக்டர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ் விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் பேராயர் பர்னபாஸ் பேசுகையில், தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள கல்வியியல் கல்லூரி கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியர் கல்வியை கற்பிப்பதில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் பயின்ற பல ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரியில் முதல்வர்களாக, பேராசிரியர்களாக, துறை தலைவர்களாக பல்வேறு அரசு பணிகளில் அதிகாரிகளாக பரிமானம் பெற்று வருவதாக குறிப்பிட்டார். விழாவில் தென்காசி ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அந்தோணி, சேகர குருக்கள் சாமுவேல், ஜெகன், பொன்ராஜ், மற்றும் சைரஸ், செங்கோட்டை நூலகர் ராமசாமி, மகாராஜா சிங், மெல்கி, தாமஸ், ரூஸ்வெல்ட், ஜெயசந்திரன், பீட்டர், கிருபாகரன், செல்வகுமார், சாலமோன், கட்டுரையாளர்கள் அரிராம், ஜெயபால், உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். முன்னதாக சென்னை டிஎஸ் குருப்ஸ் நிறுவனங்களின் தலைவர்களில் ஒருவரான மாசிலாமணி பொன்னுத்துரை மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஹெப்சி, அனிதா, நூலகர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக் அலுவலக பணியாளர் பிரெட்ரிக், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பூமியின் பசுமையை பாதுகாக்கும் நோக்கில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இறுதியில் உதவி பேராசிரியர் ஷீலா நவரோசி நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









