தென்காசியில் உலக குருதி கொடையாளர் தின விழா; குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் பாராட்டு..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர்களை பாராட்டும் விதமாக நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு அதிக ரத்த தானம் வழங்கிய குருதிக் கொடையாளர்களை பாராட்டி சிறப்பு சான்றிதழும் பதக்கமும் வழங்கினார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தின விழா குருதி மையம் சார்பாக 14.06.2024 அன்று கொண்டாடப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ஆம் தேதியை உலக குருதிக் கொடையாளர் நாளாக கொண்டாடி வருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள் 20 ஆம் உலகக் குருதி கொடையாளர் தினம் என்பது இதன் சிறப்பு. ABO ரத்த குழு அமைப்பை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ் டெய் னெரின் பிறந்தநாள் ஆகும்.
இந்நாளை சிறப்பிக்கும் வகையில், தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் பி பிரேமலதா அறிவுறுத்தலின் படியும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் R. ஜெஸ்லின் வழிகாட்டுதலின் படியும் 20 ஆம் ஆண்டு உலக குருதி கொடையாளர் தின விழாCME ஹாலில் வைத்து கொண்டாடப்பட்டது. தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி மையங்கள் இணைந்து இவ்விழாவை நடத்தியது. தென்காசி அரசு மருத்துவமனை குருதி மைய மருத்துவர் டாக்டர்.எம். பாபு அடங்கிய குழு போதிய ஏற்பாடுகளை செய்தனர். சுமார் 120க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் குருதி மையத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு நல்கிய பல்வேறு அமைப்புகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.வி. கோவிந்தன் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் தேவி பிரபா கல்யாணி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலவச குருதி வகை கண்டறியும் முகாம் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை ஆய்வகம் சார்பாக நடத்தப்பட்டது. சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த இருபதாம் ஆண்டு உலகக் குருதி கொடையாளர் தின விழாவை சிறப்பித்து தந்த அனைவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனை குருதி நிலைய மருத்துவர் டாக்டர் எம் பாபு நன்றியை தெரிவித்தார். நிலைய மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர்கள் லதா, நிர்மல், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
ரத்த வகை கண்டரியும் முகாமில் சுமார் 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் தென்காசி மாவட்ட ரத்ததான கூட்டமைப்பு சார்பாக செயலாளர் கோபி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ வங்கி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை பாராட்டி பேசியதோடு, ரத்ததான கழகங்களின் நிர்வாகிகளுக்கு மருத்துவமனை சார்பாக ஒரு அடையாள அட்டை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









