தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்; மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்; மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தினை விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அமைச்சர் வேலுவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தின் தலைநகரான தென்காசி நகரமானது வளர்ந்து வரும் நகரமாகும். மேலும் தற்போது இங்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளது. நாள்தோறும் இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே தென்காசி புற வழிச்சாலை அமைந்தால் தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். ஏற்கனவே புறவழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் சர்வே நிறைவு பெற்றுள்ளது. இதேபோல் சுரண்டை புறவழிச்சாலை பணிக்கும் திட்ட மதிப்பீடு செய்து தயார் நிலையில் உள்ளது. எனவே தென்காசி சுரண்டை புறவழிச்சாலை திட்டத்தினை விரைவில் நிறைவேற்றித்தர கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது, தென்காசி எம்.பி.ராணி ஸ்ரீகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், சுரண்டை நகர பொறுப்பாளர் கணேசன், சாம்பவர் வடகரை மாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!