தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கமல் கிஷோர் பொறுப்பேற்பு..

தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றிய ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே.கமல் கிஷோர் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஜன.27 அன்று பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக ஏ.கே. கமல் கிஷோர் ஜன.29 திங்கள் கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்ததற்கு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மேலும் பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கோரிக்கைகளை கூறலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதறகு முழு முயற்சி எடுப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில், அதற்கு தேவையான முழு நடவடிக்கைகளும் எடுப்பேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!