குற்றாலம் சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் நெல்லை பிலால் கலந்து கொணடார். மாவட்ட பொருளாளர் சையது அலி மாவட்ட துணை செயலாளர்கள் சிக்கந்தர், சங்கை இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் ஒன்றிய பாஜக அரசு செயலுக்கு தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி கண்டனத்தை பதிவு செய்கிறது. குற்றாலத்திற்கு சுற்றுலாவிற்கு வருகை தரும் வாகனங்கள் அதிவேகமாக இயக்குவதையும், மது போதையில் வாகனங்களை இயக்குவதையும் போக்குவரத்து காவல் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். தென்காசி, நெல்லை மாவட்டத்திற்கு இடையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணியில் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணியை விரைவு படுத்த வேண்டும். மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை ஒன்றிய நகர பகுதி கழகத்தினர் கூடி மாவட்ட பொதுக்குழு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.