கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்; முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்..

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்; முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்..

தென்காசி மாவட்டம் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர நிரந்தர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடையம் அருகிலுள்ள, இரவணசமுத்திரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலங்குளம் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவணசமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கட்டி அப்துல் காதர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடையம் ஒன்றிய செயலாளர் காதர் மைதீன் வரவேற்றார். மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட செயலாளர் சையது பட்டாணி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் தென்காசி முகமது அலி ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத்தலைவர் நல்லாசிரியர் செய்யது மசூது, மஸ்ஜிதுர் ரஹீம் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் செய்யது சுலைமான் ஹாஜி, வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பீர் முகம்மது, கௌரவ ஆலோசகர்கள் கமால் முகமது, ஜெய்லானி காசியார், அப்பல்லோ ரிஃபாய், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர நிரந்தர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும். மாதாபுரம் முதல் ஆழ்வார்குறிச்சி வரை உள்ள தென்காசி அம்பை சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும், மரணங்களும் ஏற்படுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோவிந்த பேரி திருமலையப்பபுரம் சாலை ஒப்பந்தம் கொடுக்கப்பட்டும், இன்னும் சாலை பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக சாலை பணியை துவங்க வேண்டும். தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த தென்காசி மாவட்டத்தில், தெரு நாய்களுக்கான கருத்தடை மையம், மற்றும் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும். கடையம் மற்றும் பொட்டல்புதூர் சாலைகளில் கனரக வாகனங்களால் சாலை நெருக்கடியும், விபத்துகளும் அதிகம் உள்ளது. எனவே ஏற்கனவே நெருக்கடியாக உள்ள கடையம் பொட்டல்புதூர் சாலையில் செல்லாமல், மாற்றுப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்முறையீடு செய்தும் வழங்கப்படாமல் உள்ள மகளிருக்கு உடனடியாக கலைஞர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் வீரா சமுத்திரம் பொறுப்பாளர் நூறு முஹம்மது, சம்பன்குளம் பொறுப்பாளர் ஈஸா, மாலிக் நகர் பொறுப்பாளர் திவான் பக்கீர் மைதீன், பொட்டல்புதூர் பொறுப்பாளர் சாகுல் ஹமீது, இளைஞரணி பொறுப்பாளர் முபீன், விவசாய அணி பொறுப்பாளர் தாஜ், பிஸ்மி நகர் பொறுப்பாளர் அப்துல் வஹ்ஹாப், வர்த்தக அணி பொறுப்பாளர் பொட்டல் புதூர் அப்பாஸ், முதலியார்பட்டி மாணவர் அணி பொறுப்பாளர் ரிஸ்வி, மாலிக் நகர் இளைஞர் அணி பொறுப்பாளர் அன்சாரி, இரவண சமுத்திரம் துணைச் செயலாளர் ஜாகிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் ரிபாய் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!