தென்காசி தலைமை மருத்துவமனையில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் ஏற்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் நாள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமானது அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 09.02.2024 அன்று தென்காசி இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக பணியாளர்கள் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பணியாளர்கள் இணைந்து, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஜெஸ்லின் தலைமையில், உறைவிட மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர் ராஜேஷ், மருத்துவர் கீதா, மருத்துவர் சரஸ்வதி, மருத்துவர் மாரிமுத்து, மருத்துவர் அன்ன பேபி, செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, வசந்தி, செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் இணைந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!