தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்..
கலைஞர் ஆட்சியின் நீட்சியாகத் தமிழகத்தில் முதல்வர் சிறப்பான ஆட்சி நடத்தியதன் மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது என சுயமரியாதை திருமண விழாவில் பேசிய எம்.பி. கனிமொழி கருணாநிதி புகழாரம் சூட்டினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் நடைபெற்ற மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் த.செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மணமக்கள் மதிச்செல்வம் – சிந்துஜா ஆகியோரது சுயமரியாதை திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.



விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: தற்போது நடைபெற்ற இந்த திருமணமானது சுயமரியாதை திருமணம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் வழிவந்த சுயமரியாதை திருமணம், சுயமரியாதை திருமணத்தில் ஆணும் பெண்ணும் சமம். யாரும் யாருக்கும் அடிமை இல்லை என தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் தற்போது பட்டப் படிப்பு முடித்து வசதி வாய்ப்பாக இருக்கிறார்கள் என்றால் அதற்குப் போராடிய இயக்கம் திராவிட இயக்கம் என்றும் அதை முன்னேற்றிக் காட்டியது திராவிட முன்னேற்றக் கழகம். கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக தமிழக முதல்வர் தமிழகத்தின் சிறப்பான ஆட்சி நடத்தி இருப்பதாகவும் அதனால் 40 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றிருக்கிறோம். அந்த வெற்றி எல்லோருக்குமான வெற்றி, இன்றைய கால இளைஞர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சிந்தனைகளையும் உழைப்பையும் வருங்கால தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் பணி இருக்கிறது. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தக் கூடியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அகற்ற வேண்டும் பேசினார்.
இவ்விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ராணி ஸ்ரீ குமார், முன்னாள் அமைச்சர் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துசெல்வி, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, டிடி ராமச்சந்திரன், பால்ராஜ், கடற்கரை கிறிஸ்டோபர், நகர செயலாளர் பிரகாஷ், நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சிவசங்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.