தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்; செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு..
தென்காசி தொகுதி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் பேசினார். தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் இலஞ்சி தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அனைவரையும் வரவேற்று பேசினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.பி.அருள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது, தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ஆகியோருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதற்கு நான் அயராது பாடுபடுவேன் இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகள் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். ராணி ஸ்ரீகுமார் மருத்துவ பட்டம் பெற்றவர். இவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும். நமது வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் நிச்சயமாக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவர் தென்காசி தொகுதி மக்களுக்கு தேவையான பணிகளை அறிவு பூர்வமாக மேற்கொள்வார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தர உள்ளார். எனவே தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் 27 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் வருகை தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் வழக்கறிஞர் கனிமொழி, கென்னடி, தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம் ஷெரிப், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மா. செல்லத்துரை, இலத்தூர் பூ. ஆறுமுகச்சாமி, எஸ்கே முத்துப்பாண்டி, வடகரை சேக்தாவூது, வீ.கே.புதூர் சேசுராஜன், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம் ரஹீம், சீவநல்லூர் கோ சாமித்துரை, தமிழ்செல்வி, திமுக ஒன்றிய செயலாளர்கள் தென்காசி வல்லம் எம். திவான் ஒலி, ஆர்.எம். அழகு சுந்தரம், செங்கோட்டை ஆ.ரவிசங்கர், கடையம் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், கடையநல்லூர் சுரேஷ், நகர திமுக செயலாளர்கள் தென்காசி ஆர்.சாதிர், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன், கடையநல்லூர் அப்பாஸ், சுரண்டை ஆ.கணேசன், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை, குற்றாலம் குட்டி, இலஞ்சி முத்தையா, சுந்தரபாண்டியபுரம் வே.பண்டாரம், பண்பொழி அ.ராஜராஜன், சாம்பவர் வடகரை முத்து, ஆய்க்குடி சிதம்பரம், அச்சன்புதூர் வெள்ளத்துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் குற்றாலம் துரை என்ற இராமையா, தென்காசி யூனியன் தலைவர் வல்லம் சேக்அப்துல்லா ஆகியோருடன்,
கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரகுமான், வழக்கறிஞர் சு.வேலுச்சாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி குற்றாலம், டி.ஆர் கிருஷ்ணராஜா, வழக்கறிஞர் அணி சு.தங்கராஜ் பாண்டியன், மாணவரணி ரமேஷ், தொண்டர் அணி இ.இசக்கி பாண்டியன், சிறுபான்மை அணி இஞ்சி இஸ்மாயில், வர்த்தக அணி முத்துக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர்கள் மேலகரம் வேணி வீரபாண்டியன், இலஞ்சி சின்னத்தாய், ஆய்க்குடி சுந்தர்ராஜன், சாம்பவர் வடகரை சீதா லட்சுமி, காளியம்மாள் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரிய பிள்ளை வலசை இ.வேலுச்சாமி, கிளாங்காடு சந்திரசேகரன், வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான், திமுக பேச்சாளர்கள் கடையநல்லூர் எம்.என்.இஸ்மாயில், வெல்டிங் மாரியப்பன், குற்றாலிங்கம் முத்துவேல், காசிதர்மம் துரை, மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









