தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, 31-01-2024 புதன்கிழமை நடைமுறைக்கு வந்தது. உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற திட்ட முகாம் மாவட்டத்தில் ஒருகுறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.
அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களும் சிவகிரி வட்டத்தில் தங்கி 31-01-2024 காலை 9.00 மணி முதல் 01-02-2024 காலை 9.00 மணி வரை பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல், தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், இத்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமுமின்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.






தென்காசி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, 31-01-2024 புதன்கிழமை தென்காசி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகிரி வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சிவகிரி தேவர் மகாசபை திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து. சிவகிரி வட்டத்தில் சிவகிரியில் உள்ள நியாய விலை கடையினையும், வட்டாட்சியர் அலுவலகத்தினையும், ஊராட்சி ஒன்றிய பள்ளி, அரசு மருத்துவமனையினையும், அரசு இ சேவை மையத்தினையும், இராயகிரி பேரூராட்சி அலுவலத்தினையும் ஆய்வு செய்ததுடன், சிவகிரி வட்டம் ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.32.75 லட்சம் கடன் உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், சிவகிரி வட்டம் இராயகிரி பேரூராட்சி பகுதியில் 4 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரத்தினை பார்வையிட்டும், சிவகிரி வட்டம் கீழகரிசல் குளம் ஊராட்சியில் ரூ.9.8 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊரணியினை பார்வையிட்டும், சிவகிரி வட்டம் தலையணை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடியும், சிவகிரி வட்டம் கரிசல்குளம் ஊராட்சி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும், சிவகிரி வட்டம் தலையணை பகுதியில் உள்ள பளியர் இன மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இன்று (ஜன.31) முழுவதும் சிவகிரி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி. துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கவிதா, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









