தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ), மிகப் பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ), மிகப் பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை. பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதிய மாணாக்கர்கள் https: //ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login-இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal) புதியதிற்கு (Fresh) 01. 02. 2024 முதல் செயல்பட்டு வருகிறது. புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணாக்கர்கள் 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









