தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி; கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழியினை 09.02.2024 அன்று அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.




உறுதிமொழியின் விவரம் பின்வருமாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டணைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டு உள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற் செய்வேன் என்றும், எந்தத் தொழிற் சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன் பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்கக வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறு வாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்.
முன்னதாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல்காதர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் (தென்காசி) சபரீசன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் (சங்கரன்கோவில்) சத்ய நாராயணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









