ஜனவரி 30 தீண்டாமை ஒழிப்பு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணு கோபால் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் துறையினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் இந்திய அரசியலமைப்பின் பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமை, மனம், வாக்கு, செயல் என்ற வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.
அரசியல் அமைப்பின் அடிப்படை கருத்திற்கு இணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியல் அமைப்பின் பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமாற உறுதி அளிக்கிறேன் என்ற உறுதிமொழி காவல் துறையில் பணிபுரியும் அனைவராலும் ஏற்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.