தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முக்கிய கோரிக்கை..
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான ரயில்வே சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பதவி ஏற்ற ஓரிரு நாட்களில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கோவையிலிருந்து மதுரை வரை இயங்கும் விரைவு ரயிலை ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைத்திடும் பணியை விரைந்து முடித்திட வேண்டும், கொல்லம் முதல் சென்னை வரை செல்லும் விரைவு ரயில் தென்காசி மாவட்டம் பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட மக்களின் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் வழங்கினார். தொடர்ந்து தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் போது ரயில்வே பயணிகள் நலச்சங்கம் அளிக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.