தென்காசி மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் க. தங்கராஜ், இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

குடியரசு தின நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கல்யாணி கலா, ஊராட்சி மன்ற உறுப்பினர் மீனா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியர் ப.கணேசன் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.