தென்காசி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் S.குமாரவேல் (52), த.பெ.சுப்பையா. தனக்கு பூர்வீக பாத்தியமான தனது தந்தையின் பெயரில் உள்ள இராஜ கோபாலப்பேரி கிராம நத்தம் சர்வே எண்.30-ல் உள்ள 1.27 ஏர் பரப்பில் உள்ள வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக 06.01.2025 ஆம் தேதி அன்று குமாரவேல் இராஜகோபாலப் பேரி கிராம நிர்வாக அலுலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு VAO பத்மாவதியை சந்தித்த போது, அவர் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க சொன்னதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அன்றைய தினமே ஆன்லைனில் விண்ணப்பித்து, பின்னர் 08.01.2025 ஆம் தேதி இராஜகோபாலப் பேரி VAO பத்மாவதியை பார்த்து பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்ததாக தெரிவித்து உள்ளார். அதற்கு VAO பத்மாவதி ஆன்லைனில் விண்ணப்பம் செய்த போது கொடுக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களை கேட்டதாகவும், அந்த நகல்களை 09.01.2025 ஆம் தேதி இராஜகோபாலப் பேரி VAO பத்மாவதியை சந்தித்து ஆவணங்களை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
அதன் பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் இராஜகோபாலப் பேரி VAO பத்மாவதி என்பவர் மீது 20.01.2025-ஆம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்து அதன் தொடர்ச்சியாக 21.01.2025-ஆம் தேதி நடத்தப்பட்ட பொறி வைப்பு நடவடிக்கையின் போது VAO பத்மாவதி (இராஜகோபாலப் பேரி கிராமம்) என்பவர் பட்டா மாறுதலுக்காக S.குமாரவேல் என்பவரிடமிருந்து ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூபாய் 4,500 பணத்தை லஞ்சமாக பெற்ற போது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பால் சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளர் ரவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வக்கன் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் வேணு கோபால், பிரபு, கோவிந்த ராஜன், தலைமைக் காவலர் கணேசன் மற்றும் பிரவீனா ஆகிய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
You must be logged in to post a comment.