தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரயில்வே துறையை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பாளர் கட்டி அப்துல் காதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரவண சமுத்திரம் மஸ்ஜிர் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யது நாகூர் ஹாஜி தலைமை தாங்கினார். ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் முகமது இக்பால், செயலாளர் காசியார், பொருளாளர் பீர் முகம்மது, துணைச் செயலாளர் R.M.S.முகம்மது மீரான் கனி, மாவட்டத் துணைத் தலைவர் நல்லாசிரியர் செய்யது மசூது, கௌரவ ஆலோசகர்கள் ஜெய்லானி காசியார், கமால், மாவட்டத் துணைச் செயலாளர் முகம்மது யஹ்யா, வீராசமுத்திரம் பிரைமரி தலைவர் நூர் முஹம்மது, மாலிக் நகர் பிரைமரி தலைவர் திவான் பக்கீர் மைதீன், மாலிக் நகர் பீர்கண், மாவட்ட விவசாய அணி பொருளாளர் தாஜுதீன், பிஸ்மி நகர் பிரைமரி தலைவர் அப்துல் வஹ்ஹாப், சம்பன்குளம் பிரைமரி தலைவர் முகம்மது ஈஸா, STU மாவட்ட துணைச் செயலாளர் காதர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பீர் முகம்மது வரவேற்றார்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தாம்பரம் செல்லும் ரயில் கடையம் மற்றும் ரவண சமுத்திரத்தில் நின்று செல்ல வேண்டும், ஈரோடு செல்லும் ரயில் ரவண சமுத்திரத்தில் நின்று செல்ல வேண்டும், ரயில் நிலையம் செல்லும் சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும். தட்கல் டிக்கெட்டுகளை இடையூறு இல்லாமல் பெறுவதற்கு நெட்வொர்க் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். பாலருவி எக்ஸ்பிரஸ் ரவண சமுத்திரத்தில் நின்று செல்ல வேண்டும், ரயில் நிலைய படிக்கட்டுகளில் கைப்பிடிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொது மக்களின் கோரிக்கைகள் ஆர்ப்பாட்ட கோஷங்களாக எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், ரவண சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹுசைன், திமுக மாவட்ட பிரதிநிதி மாலிக்நகர் முகமது யாகூப், மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசல் தலைவர் கனி, கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரிக் குமார், தர்மபுரம் மடம் கவுன்சிலர் ஜஹாங்கீர், ரவணை திமுக பொறுப்பாளர் சங்கிலி பூதத்தான், சமுதாய தலைவர் பரமசிவன், ஆறுமுகம், வீராசத்திரம் பள்ளிவாசல் தலைவர் காஜா மைதீன், மாலிக் நகர் பள்ளிவாசல் செயலாளர் அமீர் அலி, MMMK மாவட்டத் தலைவர் அன்சர், மாவட்டச் செயலர் பழக்கடை சுலைமான், வீராசமுத்திரம் ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில்வே துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மாணவர் அணி மாவட்டத் தலைவர் ரிஃபாய் ஆலிம் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.