தென்காசி மாவட்டம் வைத்திலிங்கபுரம் பகுதியில் திறந்த வெளியுடன் புதிதாக கட்டப்படுள்ள பயணிகள் நிழற்குடை மது மற்றும் சீட்டு விளையாட்டு பயிற்சி கூடமாக மாறி வருவதாகவும், இந்நிலையை தடுத்து நிறுத்தி, பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 7.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இந்த பயணிகள் நிழற்குடை நான்கு பக்கத்திலும் கான்கிரீட் பில்லர்களால் கட்டப்பட்டது. ரோடு மட்டத்தில் இருந்து சுமார் 1 1/2 அடி உயரத்தில் கான்கிரீட் தரைத்தளம் கட்டப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடையின் பின்புறம் தரை தளத்திற்கு கீழே தென்புறம், மேல்புறம் மட்டும் திறந்த வெளி உள்ளது. இதனால் சிறுவர்கள் சீட்டு விளையாடுவதற்கு பயிற்சி பெறும் பயிற்சி இடமாகவும், மதுபிரியர்கள் சரளமாக மது அருந்துவதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பாலியல் குற்ற செயல்கள் அரங்கேறும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. சுமார் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகும் சூழ்நிலை உள்ளது.
இப்பகுதியில் 300 மீட்டர் தொலைவில் ஒரு தனியார் பள்ளியும் 600 மீட்டர் தொலைவில் ஒரு அரசு உதவிபெறும் தனியார் பள்ளியும் ஒன்றரை கீலோ மீட்டர் தொலைவில் அரசுப்பள்ளியும் இயங்கி வருகிறது. இவ்விடத்திற்கு மிக அருகில் டியூசன் வகுப்பு நடைகிறது. இரவு 7:00 மணிக்கு மேல் 9:00 மணி வரை டியூசன் வகுப்பு சென்று வரும் மாணவிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் மேற்படி பயணிகள் நிழற்குடையின் பின்புறம் கீழே உள்ள திறந்த வெளியில் தென்புறம் மற்றும் மேல்புறம் சுவர் எழுப்பி பள்ளி மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என வைத்திலிங்கபுரம் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.