தென்காசி மாவட்டம், செங்கோட்டை பூலாங்குடியிருப்பு பகுதியில் உள்ள S.S.ஆர்கானிக் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணைக்கு கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ மாணவியர் கல்வி சுற்றுலா மேற்கொண்டனர். அங்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரம் நடவு, வீட்டுத் தோட்டம் & மூலிகை கொத்து (பொக்கே) பற்றிய செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. S.S.ஆர்கானிக் பண்ணை நிர்வாக இயக்குனரும், ஓய்வு பெற்ற வேளாண் அலுவலருமான மு.சேக் முகைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ம. மைக்கேல் ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வினாடி வினா, குழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. பரிசுகளை S.S.கார்டன் நிர்வாக குழுவின் சே.ஹசன் அம்ரின், சேக் முகம்மது அலி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் இப்பயிற்சி மற்றும் கல்வி சுற்றுலா பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை S.S.கார்டன் மேற்பார்வையாளரும், கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியருமான அருண் குமார் செய்திருந்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.